குராஷிகி: ஜப்பானில் இயற் கைப் பேரிடரில் பாதிக்கப் பட்ட மக்களை பிரதமர் அபே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரு வாரம் பெய்த மழை யாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் இறந்த வர்களின் எண்ணிக்கை 179க்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளி நாட்டுப் பயணத்தை ரத்து செய்த அபே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒகாயா மாவில் தற்காலிக முகாமில் தங்கியுள்ள பல ஆயிரம் பேரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையே ஜப் பானின் பேரிடர் நிர்வாகத் திட்டத்தை மறு ஆய்வு செய்யப்போவதாக அந் நாட்டின் அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஜப்பான் பிரதமர் அபே நேரில் ஆறுதல்
1 mins read

