ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 300 வீடுகள் சேதம்

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 300 வீடுகள் சேதம்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள ஒரு கிராமம் முற்றாக அழிந்த தாகக் கூறப்பட்டது. அந்த கிராமத்தில் 300 வீடுகள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சேதம் அடைந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடு பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி உத்தரவிட்டுள் ளார்.