தோக்கியோ: ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விமானச் சேவைகள் மற்றும் படகுச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புக்குழுவினர் உதவி வருகின்றனர். நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் வெள்ளத்திற்கு 200 பேர் மரணம்
1 mins read

