கெஅடிலான் கட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட அன்வார் இப்ராகிம் முடிவு

கெஅடிலான் கட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட அன்வார் இப்ராகிம் முடிவு

1 mins read
18114c97-12d0-4f65-a2c3-cb0736856533
-

மலேசியாவின் அடுத்த பிரதமர் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும் அன்வார் இப்ராகிம், 'கெஅடிலான் கட்சி' தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார். அன்வார் இப்ராகிம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தன் காரணமாக அவர், அந்தத் தலைமைப் பதவிக்குப் போட்டியிட முடியாமல் இருந்து வந்தது. அன்வாரின் மனைவி வான் அசிசா வான் இஸ்மாயில், 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அந்தக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

இயற்கைக்குப் புறம்பான பாலி யல் உறவு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளி என்று தீர்மானிக் கப்பட்டு சிறைத்தண்டனை அனுப வித்து வந்த அன்வார் இப்ராகிமுக்கு கடந்த மே மாதம் நாட்டின் மாமன்னர் முழு மன்னிப்பு வழங்கி னார். அதனையடுத்து அரசியலில் முற்றிலும் ஈடுபடக்கூடிய உரிமை அன்வாருக்கு கிடைத்துள்ளது. அன்வாரின் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் அண்மை யில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத் திருப்பது குறிப்பிடத்தக்கது. "நாடு முழுவதும் கட்சியின் அடித்தள அமைப்புகள் எனக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், 2018 நவம்பரில் மக்கள் நீதிக்கட்சியின் தலைவராக நான் அந்தக் கட்சிக்கு வழிகாட்டுவேன்," என்று திரு அன்வார் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

அன்வார் இப்ராகிம்.