லண்டன்: பிரிட்டன் வெளியேற்றம் (பிரெக்ஸிட்) தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு நடத்து வதற்குப் பதிலாக அந்த அமைப்பு மீது வழக்கு தொடுக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு யோசனை கூறியதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்தார். பிபிசி நிருபர் ஒருவரின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். முன்னதாக திரு டிரம்ப் பிரிட்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் தெரேசா மேக்கு தான் ஒரு யோசனை கூறியதாகவும் ஆனால் அது கடுமையானது என்று அவர் கருதியதாகவும் திரு டிரம்ப் கூறினார்.
தெரேசாவிடம் டிரம்ப் கூறிய யோசனை
1 mins read

