1எம்டிபி புலன்விசாரணை அதிகாரிகள் மீதான வழக்கை திரும்பப் பெற்ற நஜிப்

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவருக்கு எதிரான ஊழல் விசாரணை தொடர்பில் புலன்விசாரணைக் குழுவின் உயர் அதிகாரிகள் மூவர் மீது தொடுத்திருந்த வழக்கை தற்போது மீட்டுக் கொண்டுள்ளதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் முகமட் சுக்ரி, அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ், வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்கு நர் அமர் சிங் ஆகியோர் மீது தொடுத்திருந்த வழக்கை திரு நஜிப் மீட்டுக்கொண்டார். அந்த மூவர் மீது திரு நஜிப் தொடுத்திருந்த வழக்கை அவர் மீட்டுக்கொண்டதை நஜிப்பின் வழக்கறிஞர் பாட்ரூல் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார். அந்த வழக்கை மீட்டுக்கொள்ள உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த தாகவும் அவர் சொன்னார்.