மலேசியா: போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின்பேரில் 9 பேர் கைது

மலேசியா: போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின்பேரில் 9 பேர் கைது

1 mins read

ஜோகூர்பாரு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஒன்பது பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். மூவாரில் சென்ற வாரம் போதைப் பொருள் கடத்தப்பட்டதில் அந்த ஒன்பது பேருக்கும் தொடர்பு இருப்பதாக போலிசார் நம்புகின்றனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஒன்பது பேரில் ஒருவர் சிங்கப்பூரர் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து 37,000 ரிங்கிட் ரொக்கப் பணம் (S$12,400), ஒரு கார் இவற்றுடன் 98 எக்டசி மாத்திரைகளையும் போலிசார் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மூவாரில் கடந்த புதன்கிழமை போலிசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலிசார் மேற்கொண்ட சோதனையின்போது அந்த 9 பேரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.