நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற அம்னோ ஆர்ப்பாட்டக்காரர்கள்

நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற அம்னோ ஆர்ப்பாட்டக்காரர்கள்

1 mins read
3f531521-ec0c-49da-8cac-cb32061eb167
-

மலேசிய நாடாளுமன்றத்தில் மன்னர் தொடக்கவுரை ஆற்ற இருந்தபோது நாடாளுமன்றத்தை நோக்கி அணி- வகுக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்- களை மலேசிய போலிசார் தடுத்து நிறுத்தினர். உயர் பதவிகளில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்ட தற்கு மாமன்னர் மௌனமாக இருப்பதாகக் கூறி அவர்கள் அணிவகுக்க இருந்தனர்.

புக்கிட் அமான் போலிஸ் தலை மையகத்தில் இருந்து நாடாளுமன் றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் இரு முறை அணிவகுக்க முயற்சி செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு முன்னதாகவே போலிசாரும் கலகத் தடுப்பு போலிசா- ரும் அவர்களைத் தடுத்தனர்.

அம்னோ உறுப்பினர்கள் மேற்கொள்ளவிருந்த போராட்டத் தைத் தடுத்து நிறுத்திய போலிஸ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்