தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகையில் மாட்டிக்கொண்ட தங்களை பிரிட்டிஷ் முக்குளிப்பாளர்கள் இரண்டு பேர் குகைக்குள் கண்டது நம்பமுடியாத ஓர் அதிசயம் என்று மீட்கப்பட்ட 12 சிறார்களில் ஒரு சிறுவன் நேற்றுக் கூறினான். அந்தச் சிறார்களும் அவர்களின் காற் பந்து பயிற்றுவிப்பாளரும் நேற்று முதன்முத லாக செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சியாங் ராய் என்ற வடக்கு மாநிலத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி தேசிய அளவில் ஒளி பரப்பப்பட்டது. அந்தச் சிறார்கள் புன்னகை யுடன் காணப்பட்டனர். தாய்லாந்து பாரம்பரிய முறையில் வணக்கம் தெரிவித்தனர்.
11 முதல் 16 வரை வயதுள்ள அந்தச் சிறார்களையும் 25 வயது பயிற்றுவிப்பாளரை யும் மருத்துவர்களும் உறவினர்களும் நண்பர் களும் வாழ்த்திப் பாராட்டினர். சிறார்கள் தங்களுடைய காற்பந்து அணி யைக் காட்டும் காட்டுப் பன்றி படம் போட்ட டி-சட்டைகளை அணிந்திருந்தனர்.
தாய்லாந்தில் வெள்ளம் சூழ்ந்த குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறார்களும் காற்பந்து பயிற்றுவிப்பாளரும் சியாங் ராய் மாநிலத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் புன்னகையுடன் பாரம்பரிய முறைப்படி வணக்கம் தெரிவித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

