அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து அதிபரின் மாறுபட்ட கருத்து

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து அதிபரின் மாறுபட்ட கருத்து

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், "2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவு அமைப்புகள் முடிவுக்கு வந் திருப்பதை நான் ஏற்றுக்கொள்கி றேன்," என்று கூறியுள்ளார். இது, திரு டிரம்ப் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் செய்தி யாளர்களிடம் பேசியபோது கூறிய கருத்துக்கு மாறுபட்டதாகும். அங்கு ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்துப் பேசிய பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக் கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த திரு டிரம்ப், தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்தது என்று சொல்வதற்கு காரணம் எதுவும் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

அவரது இக்கூற்று, அமெரிக்க உளவுத் துறையினர் கூறுவதற்கு நேர்மாறாக உள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகள் மீது நம்பிக்கை வைக்காமல் ரஷ்யாவுக்கு ஆதரவாக திரு டிரம்ப் பேசியதைத் தொடர்ந்து டிரம்ப்பின் செயலுக்கு அமெரிக்கா வில் பலர் கண்டனம் தெரிவித் தனர். திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய செனட்டர்கள் பலர், ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசியதை கடுமையாகச் சாடினார். திரு டிரம்ப் அவ்வாறு கூறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து திரு டிரம்ப் முன்பு கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.