மருத்துவமனையில் யுதயோனோ; பிரபோவோவுடனான சந்திப்புத் தள்ளிவைப்பு

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டி யிடவுள்ள திரு ஜோக்கோ விடோ டோவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பில் இந்தோனீ சிய முன்னாள் அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோவும் ஜெரின் டிரா கட்சித் தலைவர் பிரபோ வோவும் சந்தித்துப் பேசவிருந்தனர். பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தச் சந்திப்பை எதிர்பாராத விதமாக தள்ளிவைக்க நேர்ந் துள்ளது. ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான திரு யுதயோனோ கிழக்கு ஜாவாவுக்கும் யோக் ஜகார்த்தாவுக்கும் அண்மையில் வருகையளித்ததைத் தொடர்ந்து பயணக் களைப்பால் அவரது உடல்நிலைப் பாதிக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை மருத்துவ மனையில் அவர் சேர்க்கப்பட்டதாக அவரது கட்சியின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.