தேர்தல் வன்முறையைத் தடுக்க பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

தேர்தல் வன்முறையைத் தடுக்க பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

1 mins read
4f3f0d20-91d4-46c7-abb2-d71571299886
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அடுத்த வாரம் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அங்கு அதி கரித்துள்ளன. இதனால் பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் மூன்று கட்சி களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளை யில் பாகிஸ்தான் ராணுவம், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதனை இம்ரான்கான் மறுத் துள்ளார். 342 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கானின் பிரசார உரையைக் கேட்க லாகூரில் திரண்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள். படம்: ஏஎஃப்பி