கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு பிரச்சினைக்குரிய சில அதிகாரிகளும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களும்தான் என பிரதமர் மகாதீர் முகம்மது கூறினார். வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்ற வேளையில் பல தடைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.
முந்தைய அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அதற்கு தடையாக உள்ளன என்றும் அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் கைரி ஜமாலுதின் வினவிய கேள்விக்கு திரு மகாதீர் இவ்வாறு பதில் அளித்தார். இரு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்னும் 6 வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளன என்றும் திரு மகாதீர் கூறினார்.

