இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறு கின்றன. அவரது டெஹ்ரிக்-இ- இன்சஃப் கட்சி, மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவதற்காக தீவிர பிரசாரத்தில் திரு இம்ரான் கானும் அவரது தொண்டர்களும் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் திரு இம்ரான் கான் பிபிசிக்கு அளித்த பேட்டியில், தன்னை எதிர்ப்பவர்கள் ஆட்சியில் இருந்தபோது குற்றங்கள் செய்திருப்பதாக பதிவாகி இருப்பதால் அவர்கள் தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்று கூறியுள்ளார்.
எதிர்வரும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? என்ற சிலரின் கவலை தேவையற்றது என்றும் அவர் கூறினார். தனது கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதன் காரணமாகவே திடீரென்று மற்ற அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறாது என்று கூறுவதாகவும் இம்ரான் கான் கூறினார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஆதரவாளர்களைப் பார்த்து கை அசைத்தார். படம்: ஏஎஃப்பி

