கோலாலம்பூர்: மலேசியாவில் ஒடுக்குமுறை சட்டமாகக் கருதப் படுகின்ற, குறிப்பாக பாதுகாப்பு குற்றச்செயல்கள் (சிறப்பு நடவடிக் கைகள்) சட்டம் 2012ஐ (Sosma) மலேசிய அரசாங்கம் ரத்து செய்யும் என்று பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்து இருக்கிறார். இந்தப் பாதுகாப்புக் குற்றச் செயல்கள் சட்டம், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நிர்வாகத்தின்கீழ் நடப்புக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி யாரையும் வழக்கு விசாரணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கமுடியும் என்று டாக்டர் மகாதீர் குறிப் பிட்டார்.
"திரு நஜிப்பின் சட்டம் ஒருவரைக் கைதுசெய்து நீதி மன்றத்திற்குக் கொண்டு செல் லாமல் சிறையில் வைக்க வகை செய்கிறது. "அப்படி கைது செய்யப்படும் ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவரைக் கொலை செய்தவருக்கு எதிராக விசாரணை நடக்காது. எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது. இத்தகைய சட்டத்தைத் தான் திரு நஜிப் நிறைவேற்றி இருக்கிறார். இதை நாங்கள் ரத்து செய்துவிடுவோம்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

