கிரேக்கத்தில் காட்டுத் தீ; குறைந்தது 24 பேர் மரணம்

கிரேக்கத்தில் காட்டுத் தீ; குறைந்தது 24 பேர் மரணம்

1 mins read

ஏதன்ஸ்: கிரேக்கத் தலைநகர் ஏதன்ஸ் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 24 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாண்டவர்களில் பலரது சடலங்கள் அவர்களது வீடு களிலும் கார்களிலும் கண்டெடுக் கப்பட்டன. காட்டுத் தீயின் காரணமாக 104 பேருக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காயமடைந் தோரில் 16 பேர் சிறுவர்கள் என்று அதிகாரிகள் கூறினர். கடற்கரை நகரான மட்டியில் உள்ள ஒரு சாலையில் குறைந்தது நான்கு பேர் மாண்டு கிடந்ததைச் சிலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாண்டோர் எண்ணிக்கை உயரக்கூடும் என கிரேக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.