'ஆசியாவிலேயே அதிக நீரிழிவு பாதிப்பு மலேசியருக்குத்தான்'

'ஆசியாவிலேயே அதிக நீரிழிவு பாதிப்பு மலேசியருக்குத்தான்'

1 mins read

குச்சிங்: ஆசியாவிலேயே மலே சியாவில்தான் ஆக அதிகமானோர் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உள்ள தாக தேசிய நீரிழிவுக் கழகத்தின் (என்ஏடிஐ) நிர்வாகத் தலைவர் டாக்டர் முஸ்தஃபா எம்போங் கூறியுள்ளார். அனைத்துலக அளவில் ஒப்பிட்டாலும் இந்தப் பாதிப்பு அதிகம்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட சுமார் 2.5 மில்லியன் மலேசியர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறியுள்ளார். "அவர்களில் பாதிக்கும் மேற் பட்டோர் தாங்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"வகை2 நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழப்பு, கால்களை இழக்க வேண்டிய நிலை போன்றவை ஏற்படும் வரை நீரிழிவுக்கான அறி குறி ஏதும் தென்படுவதில்லை," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'டிகாம் 2018' எனும் பத்தாவது நீரிழிவு சிக்கல் கருத்தரங்குக்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மாநாட்டில் நீரிழிவால் பாதிக் கப்பட்டவர்களுக்கான பல்வேறு மருத்துவ உத்திகள், புதிய சிகிச்சை முறைகள் போன்றவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.