வாஷிங்டன்: அதிபர் டோன்ல்ட் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக வர்த்தகப் போர் அதி கரித்து வருவதால் பாதிப்படையும் விவசாயிகளுக்கான அவசரகால உதவியாக $16.36 பில்லியன் (12 பில்லியன் அமெரிக்க டாலர்) தொகையை அமெரிக்கா அறிவித் துள்ளது. இரும்பு, அலுமினியம் மீது விதிக்கப்படும் திரு டிரம்ப்பின் புதிய வரிகளின் எதிரொலியாக அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா, மெக்சிகோ, மற்ற நாடுகள் விதிக்கும் தீர்வையால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்காக இந்த உதவி வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த உதவித்தொகைகள் விவ சாயிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்பாக, திரு டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்குப் பாதகம் விளை விப்பதாக இருக்கிறதென்று குறைகூறும் விவசாயக் குழுக்கள், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க இந்த உதவித் தொகை வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் மிசௌரியில் நிகழ்த்திய உரையின்போது விவ சாயிகளிடம் கொஞ்சம் பொறுமை காக்குமாறு வேண்டியதுடன் தமது கொள்கைகளால் விவசாயிகள் தான் அதிகம் பயனடைய இருக்கி றார்கள் எனத் தமது அணுகுமுறை யைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

