மலேசியா: ஆசியானில் தென்சீனக்கடல் விவகாரம் விவாதிக்கப்படும்

மலேசியா: ஆசியானில் தென்சீனக்கடல் விவகாரம் விவாதிக்கப்படும்

1 mins read

கோலாலம்பூர்: தென்சீனக்கடல் பகுதியில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை அடுத்து ஏற்பட்டிருக்கும் அக்கறைகளுக்கிடையே, அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஆசியான் கூட்டத்தில் நாடுகள் நடந்துகொள்ள வேண்டிய முறை (சிஓசி) பற்றி விவாதிக்கப்படும் என மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா நேற்று கூறியுள்ளார். அந்தப் பகுதியில் சீனா உருவாக்கியுள்ள தீவில் ராணுவ தளவாடங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்கா பல முறை அந்தப் பகுதிக்கு போர்க் கப்பல்களை அனுப்பி சுதந்திரமான போக்குவரத்தைச் சோதித்துப் பார்த்துள்ளது. தென்சீனக் கடல் வழியில் போர்க்கப்பல்களை அனுமதிக்கக்கூடாது என மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் சிஓசி பற்றி விவாதிக்கப்படும் என்றும் இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டில் கையெழுத்தான சிஓசி முறையாக நடப்பில் இல்லை என்றும் திரு சைஃபுதீன் கூறியுள்ளார்.