டொரோண்டோ துப்பாக்கிக்காரன் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவன்

டொரோண்டோ துப்பாக்கிக்காரன் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவன்

1 mins read

டொரோண்டோ: டொரோண்டோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஃபைசால் உசேன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாக போலிசார் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமுற்றனர். போலிசார் எதிர்த்தாக்குதல் நடத்தியபோது உசேன் மாண்டுபோனார். மளிகைக்கடை ஒன்றில் பணிபுரிந்துவந்த உசேன் மனநலம் குன்றியவர் என்று கூறப்பட்டது.