மே 9ஆம் தேதி தேசிய முன்னணி தோல் வியைத் தழுவிக்கொண்டிருந்த நேரத்தில் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். அன்றைய இரவில் நாட்டில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தைத் தாம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் மலேசிய நாடாளுமன்றத்தில் கூறினார். பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரான அவர் நேற்று இது குறித்து மன்றத் தில் தெரிவிக்கையில், "தேர்தல் முடிவு வெளி யானபோது பிரதமராக இருந்த நான் தோல்வி பயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் நெருக்கடி நிலையை அறிவிக்கவும் முயன்றதாக என் மீது குற்றச்சாட்டுகளும் பழிச்சொல்லும் கூறப் படுகின்றன.
"ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை. மே 9ஆம் தேதி தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுக் கவில்லை என்பதை இப்போது மாண்புமிகுந்த அந்த அவையில் நான் தெரிவித்துக்கொள் கிறேன். என்னுடைய இந்த கூற்றை அப்போது தற்காப்புப் படைத் தலைவராக இருந்தவரிட மும் தலைமை போலிசாக இருந்தவரிடமும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் எல்லா உறுப் பினர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள் ளலாம்," என்றார் திரு நஜிப்.

