வியந்தியன்: அண்மையில் லாவோ ஸில் அணைக்கட்டு ஒன்று இடிந்து விழுந்ததில் நூற்றுக் கணக்கானோர் மாயமானார்கள். அணை உடைந்ததில் லாலோஸில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. காணாமல் போனவர்களைத் தேட அதிகாரி கள் தேடி வருகின்றனர். கனமழை பெய்து வருவதால் தேடுதல் பணி சவால்மிக்கதாகி உள்ளது. இதுவரை 27 பேர் மாண்டு விட்டதாக உறுதி செய்யப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 131 பேரை இன்னும் காணவில்லை. தேடுதல் பணியில் சீனா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளம் பக்கத்து நாடான கம்போடியா வையும் தற்போது பாதித்துள்ளது. லாவோஸிலிருந்து கம்போடியா வுக்குள் புகுந்துள்ள வெள்ளத்தால் கம்போடியர்கள் பலர் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
லாவோஸ் அசம்பாவிதம்; கம்போடியாவில் பாதிப்பு
1 mins read

