ஆப்கான் உளவுத்துறையினர் மீது தாக்குதல்: ஐவர் மரணம்

ஆப்கான் உளவுத்துறையினர் மீது தாக்குதல்: ஐவர் மரணம்

1 mins read

காபூல்: சாலையில் வரிசையாகச் சென்றுகொண்டிருந்த ஆப்கா னிஸ்தான் உளவுத்துறையின ரின் வாகனங்களைக் குறி வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமுற்றதாக போலிசார் தெரி வித்தனர். இந்தத் தாக்குதல் ஆப்கா னிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடைபெற்றது. மாண்டோரில் பலர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களில் ஒருவரும் தாக்குதலில் மரணம் அடைந்தார். தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுக்கொண்டது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் வாகனத்தில் வெடி பொருள்களை ஏற்றிக்கொண்டு தாம் ஓட்டிச் சென்ற வாகனத்தை உளவுத்துறையினர் பயணம் செய்துகொண்டிருந்த கார் மீது மோதியிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற் கொலைத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் மாண்டனர். அவர்களில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் ஓட்டுநர் முகம்மது அக்தரும் ஒருவர்.