'ரஷ்ய வழக்கறிஞரை மகன் சந்தித்து பேசியது டிரம்ப்புக்குத் தெரியும்'

'ரஷ்ய வழக்கறிஞரை மகன் சந்தித்து பேசியது டிரம்ப்புக்குத் தெரியும்'

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்ப், மருமகன் ஜெரட் குஷ்னர், அப்போதைய பிரசாரக் குழுத் தலைவர் பால் மனஃபர்ட் ஆகிய மூவரும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்துப் பேசியது திரு டிரம்ப்புக்குத் தெரியும் என்று அவரின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கோஹென் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சந்திப்பு பற்றி மகன் ஜூனியர் டிரம்ப் அவரது தந்தையிடம் கூறியபோது தானும் அங்கிருந்ததாக மைக்கல் கோஹென் கூறியுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரணை செய்யும் சிறப்புக் குழுவினர் முன்னிலையில் இதனைக் கூற மைக்கல் கோஹென் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு நடந்த அந்த சந்திப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.