பேங்காக்: தாய்லாந்தில் டுரியான் பழத்தை திருடிய ஒருவரை அந்த பழத்தோட்டத்தின் உரிமையாளர் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. அந்த உரிமையாளர் போலிசாரிடம் சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான சுகோன் சுதிராக் என்பவர் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்குவதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல நாட்களாக தனது பழத்தோட்டத்திலிருந்து டுரியான் பழங்கள் திருடிச் செல்லப்பட்டதாகவும் வியாழக்கிழமை மரத்திலிருந்து டுரியான் பழங்கள் கீழே விழும் சத்தம் கேட்டு தான் ஓடிவந்து பார்த்தபோது இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் மரத்தில் ஒருவர் இருந்ததாகவும் அந்த உரிமையாளர் போலிசாரிடம் கூறியுள்ளார். மரத்திலிருந்து கீழே இறங்க மறுத்த அந்த நபர் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கூறியதும் பயத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டதாக அந்த உரிமையாளர் கூறிய தாக போலிசார் கூறினர்.
தாய்லாந்தில் டுரியான் திருடியவரை சுட்டுக்கொன்ற விவசாயி கைது
1 mins read

