யங்கூன்: மியன்மாரில் கடந்த சில நாட்களாகப் பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரின், முன் ஆகிய மாநிலங்களும் பகோ வட்டாரமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் தற்காலிக முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி வருவதாக தொண்டூழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் மியன்மார் வெள்ளப்பெருக்கு மற்றும் புயலால் பாதிக்கப்படுகிறது.
மியன்மாரில் வெள்ளப்பெருக்கு; பலர் வெளியேற்றம்
1 mins read
-

