வேகமாக வளர்ச்சி அடையும் அமெரிக்கப் பொருளியல்

வேகமாக வளர்ச்சி அடையும் அமெரிக்கப் பொருளியல்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் பொருளியல் கடந்த நான்கு ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சி கண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கப் பொருளியல் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை புள்ளிவிவரத் தகவல்கள் உணர்த்துகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளியல் வேகமாக வளர்ச்சி அடைந்து ஆண்டு விகிதத்தில் 4.1 விழுக்காடு வளர்ச்சி அடைந் துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளி விவர கணக்குகள் கூறுகின்றன. இதுபற்றி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 13 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளியல் இப்போதுதான் வேகமாக வளர்ச்சி கண்டுவருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டு அமெரிக்கப் பொருளியல் 3 விழுக்காடு அல்லது அதற்கு கூடுதலாக வளர்ச்சி கண்டால் 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு அடைந் துள்ள மிகப்பெரிய வருடாந்திர வளர்ச்சி விகிதமாக இது இருக்கும் என்று திரு டிரம்ப் கூறினார். அமெரிக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு தனது கொள்கை களும் முக்கிய பங்காற்றி வருவதாக திரு டிரம்ப் குறிப் பிட்டார்.