கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; இரு தீயணைப்பாளர்கள் பலி

1 mins read
a1e8036b-351a-4d15-95ea-776352a18689
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில் ஆயிரக்கணக் கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் மிகுந்த சிரமப்படும் நிலையில் தீயணைப்புப் பணியின்போது இருவர் தீயில் சிக்கி உயிரிழந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு பாட்டி மற்றும் அவரது இரு பேரப் பிள்ளைகளையும் காண வில்லை என்று அதிகாரிகள் கூறினர். சுமார் 48,000 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிவதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பாளர்கள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. வடக்கு கலிஃபோர்னியாவில் வீசும் பலத்த காற்றின் காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. தீயில் 500 வீடுகள் எரிந்து சாம்பலானதாகவும் இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு காட்டுத் தீ மிரட்டலாக உள்ளது என்றும் தீயணைப்பாளர்கள் கூறினர்.

வடக்கு கலிஃபோர்னியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். 5% தீயை மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது என்று அவர்கள் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி