கம்போடியாவில் இன்று தேர்தல்; 60% மக்கள் வாக்களிப்பர்

கம்போடியாவில் இன்று தேர்தல்; 60% மக்கள் வாக்களிப்பர்

1 mins read

நோம்பென்: கம்போடியாவில் இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சுமார் 60 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் கம்போடியப் பிரதமர் ஹுன் சென் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஹுன் சென்னின் ஆளும் கம்போடிய மக்கள் கட்சிக்கு எதிராக 19 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. கம்போடியத் தேர்தல் நம்பகத்தன்மை குறித்து மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் கேள்விகள் எழுப்பியுள்ளன. கம்போடியாவில் சில ஊடகங்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மனித உரிமை குழுக்கள் குறை கூறியுள்ளன.