கோலாலம்பூர்: புதிய கார் தயாரிப்புத் திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் மீண்டும் பரிசீலித்து வருவதாக மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம் என்றும் திரு மகாதீர் கூறினார். "வெளிநாடுகளிலிருந்து வாகனங்கள் எளிதாக மலேசியாவுக்குள் வருவதைத் தடுக்க நிபந்தனைகளை விதிப்பதற்கான சாத்தியங்களை ஆராய வேண்டியுள்ளது," என்று திரு மகாதீர் கூறினார். தடையற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு மலேசிய அரசாங்கம் இணங்கியுள்ள வேளையில் மற்ற உலக நாடுகள் அவற்றின் சொந்த சந்தைகளில் நிபந்தனைகளை விதிப்பதாக திரு மகாதீர் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு கார் தயாரிப்பு தொழில் மிகவும் முக்கியம் என்று கூறிய திரு மகாதீர், மலேசியாவின் பொறியியல் திறனை மேம்படுத்த புதிய கார் தயாரிப்பு திட்டம் உதவும் என்று சொன்னார்.
மகாதீர்: புதிய கார் தயாரிப்பு திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படும்
1 mins read

