ஐஎஸ் தொடர்புடைய குழுக்களுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் தடை

ஐஎஸ் தொடர்புடைய குழுக்களுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் தடை

1 mins read

கோலாலம்பூர்: இந்தோனீசியாவில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணமான ஜேஏடி எனப்படும் ஜமா அன்ஷருட் டாவ்லா போராளிகள் குழுவுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இந்தோனீசிய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தோனீசியாவில் பல இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஜேஏடி குழுவே காரணம் என்று கடந்த வாரம் அக்குழு மீது குற்றம் சாட்டப்பட்டது. அக்குழுவைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரையும் அதிகாரிகள் கைது செய்யவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றத் தீர்ப்பு வகை செய்கிறது. 2016ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அக்குழுவே காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் குழுவுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜேஏடி குழு 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழு ஜாவா மட்டுமல்லாமல் இந்தோனீயா முழுவதும் போராளிகளை திரட்டி வந்தது.