இந்தோனீசிய மலையடிவாரத்திலிருந்து காப்பாற்றப்பட்ட 500 மலையேறிகள்

இந்தோனீசிய மலையடிவாரத்திலிருந்து காப்பாற்றப்பட்ட 500 மலையேறிகள்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள ரிஞ்சானி மலையடிவாரத்தில் சிக்கித் தவித்த சுமார் 500 மலேயேறிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தாக அதிகாரிகள் கூறினர். சுற்றுலாத்தலமான லொம்போக் தீவுப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கிய தைத் தொடர்ந்து ரிஞ்சானி மலை சுற்றுவட்டாரத்தில் நிலச் சரிவுகள் ஏற்பட்டதால் அந்த மலையில் ஏறிக்கொண்டிருந்தவர் கள் தவிக்க நேர்ந்தது. அந்த மலையிலிருந்து இறங் குவதற்கு பாதுகாப்பான வழியை மீட்புக் குழுவினர் கண்டுபிடித் ததைத் தொடர்ந்து மலேயேறி கள் பலரும் அவர்களுக்கு வழிகாட்டியவர்களும் அந்த வழியாக மலையடி வாரத்திற்கு வந்து சேர்ந்தனர். சிலர் ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப் பட்டனர்.