வாஷிங்டன்: ஈரானுடனான அமெரிக்க உறவு பாதிக்கப்பட் டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானிய அதிபரை சந்தித்துப் பேச தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். முன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ஈரானிய அதிபரை சந்திக்க தான் தயாராக இருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். "நான் யாரை வேண்டுமானலும் சந்திப்பேன். எனக்கு சந்திப்புகளில் நம்பிக்கை உண்டு. ஈரான் விரும்பினால் அந்நாட்டுடன் பேச்சுநடத்த தயார்," என்று வெள்ளை மாளிகை யில் நடந்த செய்தியாளர் கூட்டத் தில் திரு டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுடன் 6 வல்லரசு நாடுகள் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா அண்மையில் விலகி யது. அதனைத் தொடர்ந்து அவ்விரு நாடுகளுக்கும் இடை யில் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஈரான் மீது மேலும் பல தடைகளை விதிக்கப்போவதாக திரு டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வந்தது.
டிரம்ப்: ஈரானுடன் பேச்சு நடத்த தயார்
1 mins read

