கோலாலம்பூர்: மலேசியா எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று இன அரசியல் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சைபுதின் அப்துல்லா கூறியுள்ளார். சிஎன்ஏ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர், மலேசியாவில் புதிய பக்கத்தான் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றிக் கூறினார். இன அரசியல் பற்றி குறிப்பிட்ட அவர், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தான் கருதுவதாகக் கூறினார். இது சாத்தியமானதே என்றும் அவர் கூறினார். திரு சைபுதின் 2015ஆம் ஆண்டு அம்னோ கட்சியிலிருந்து விலகி மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தார். மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சைபுதின், தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். சில நிபந்தனைகளின் கீழ் மலேசியாவில் புதிய வகை அரசியல் சாத்தியமானது என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
'மலேசியாவில் இன அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'
1 mins read

