கோலாலம்பூர்: ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை நீக்குவதற்கான மசோதாவை பக்கத்தான் ஹராப்பான் அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. முதல் வாசிப்புக்கு நேற்று ஐந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பொருள் சேவை வரிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தவிருக்கும் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை சேவை வரியைக் கொண்டுவருவதற்கான புதிய மசோதாவும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் மாதத்திலிருந்து ஜிஎஸ்டி வரி நீக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தது. ஆனாலும் இன்னமும் சில வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. அதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பை முற்றாக அகற்றும் நோக்கத்தில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக நிதித் துணை அமைச்சர் அமிருதீன் ஹம்சா தெரிவித்தார்.
பொருள் சேவை வரியை நீக்க மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
1 mins read

