வடகொரியா மீது தடைகளை நீட்டிக்க நெருக்குதல் தேவை அமெரிக்கா

வடகொரியா மீது தடைகளை நீட்டிக்க நெருக்குதல் தேவை அமெரிக்கா

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியா மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்வதற்கு ஆசியான் நாடுகளுக்கும் கடமையும் பொறுப்பும் உள்ளது என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் வலியுறுத்தவிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திரு போம்பியா இந்த வாரம் சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைப் பற்றி அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் சுருக்கமாகக் கூறினார். சிங்கப்பூரில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் திரு போம்பியோ கலந்துகொள்ளவிருக்கிறார். 27 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் வடகொரிய அதிகாரிகளும் கலந்துகொள்ளவிருப்பதாக அந்த அமெரிக்க அதிகாரி கூறினார்.