தாய்லாந்து ஆற்றில் நீர்மட்டம் அதிகரிப்பு

தாய்லாந்து ஆற்றில் நீர்மட்டம் அதிகரிப்பு

1 mins read
a674b51e-3594-4a2a-b91c-746b8997dcf9
-
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள மிகோங் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் ஆற்றுநீர் எந்த நேரத்திலும் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் வடபகுதியில் உள்ள மாநிலங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக மாநில ஆளுநர் ஒருவர் கூறினார். நூற்றுக்கணக்கான கடைக்காரர்களும் தங்கள் பொருட்களை உயரமான இடங்களுக்கு எடுத்துச்சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு உதவ ராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.