காபூலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 வெளிநாட்டவர்கள்

காபூலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 வெளிநாட்டவர்கள்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் மூன்று வெளிநாட்டினர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதி காரிகள் கூறியுள்ளனர். இதனை பயங்கரவாதச் சம்பவம் என்று போலிசார் வகைப் படுத்தியிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த மூவரில் ஒருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது. மற்ற இருவரில் ஒருவர் மலேசியர் என்றும் மூன்றாவது நபர் மெசிடோனியா நாட்டைச் சேர்ந்த வர் என்றும் அதிகாரிகள் கூறினர். காபூலில் கடத்தப்பட்ட அந்த மூவரும் அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் களின் சடலங்கள் ஒரு காருக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

அந்தப் படுகொலைக்கு இது வரை எந்தக் குழுவும் பொறுப் பேற்கவில்லை. அந்த மூவரும் அனைத்துலக உணவு நிறுவனம் ஒன்றில் சமையற்காரர்களாக பணியாற்றி வந்ததாக தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். ஆப்கானிஸ்தானில் போராளி கள் அல்லது சில பயங்கரவாத குழுவினர், உள்ளூர்வாசிகளை அல்லது வெளிநாட்டவர்களைக் கடத்திச்சென்று மிரட்டிப் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண் டுள்ளனர்.