சோல்: வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அத்துடன் கொரியப் போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடற்பாகங்களை அமெரிக்காவுக்கு வடகொரியா அனுப்பி வைத்ததற்கு திரு டிரம்ப் நன்றி தெரிவித்தார். 1950 முதல் 1953 வரை இரு கொரியாக்களுக்கு இடையே நடந்த போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் உடற்பாகங்கள் அவை என நம்பப்படுகிறது. திரு கிம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதாக திரு டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் புகழ்ந்துள்ளார். அத்துடன், திரு கிம் கொடுத்த கடிதம் ஒன்றுக்காகவும் திரு டிரம்ப் நன்றி தெரிவித்தார். சிங்கப்பூரில் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்துப் பேசியபோது, போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் எஞ்சிய உடற்பாகங்களை திருப்பித்தர திரு கிம் உறுதி அளித்திருந்தார்.
அமெரிக்க வீரர்களின் உடற்பாகங்களை அனுப்பிய கிம்முக்கு டிரம்ப் நன்றி
1 mins read

