வாஷிங்டன்: மாஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பத்து ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றிய ரஷ்ய உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண் கையும் களவுமாக பிடிபட்டதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் வட்டார பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வழக்கமான சோதனை மேற் கொண்டபோது ரஷ்யாவைச் சேர்ந்த அந்த பெண் உளவாளி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அந்தப் பெண், ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளுடன் பல தடவை சந்தித்துப் பேசியது அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின்னர் அமெரிக்கத் தூதரகத்திற்கு அது பற்றி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பெண் வேலை யிலிருந்து நீக்கப்பட்டார்.
மாஸ்கோவில் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய ரஷ்ய உளவாளி பிடிபட்டார்
1 mins read

