சொல்வது ஒன்று செய்வது வேறு: வடகொரியாவை சாடும் அமெரிக்கா

சொல்வது ஒன்று செய்வது வேறு: வடகொரியாவை சாடும் அமெரிக்கா

1 mins read

சிங்கப்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டின் அணுவாயுதங்களைக் களைவ தாகக் கூறுவதும் மறுபக்கம் அந்நாடு அதன் அணுவாயுத திட்டங்களுக்கான பணிகளைத் தொடர்வதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித் திருக்கிறார். சிங்கப்பூரில் இன்று தொடங்கும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சிங்கப்பூருக்கு வந்துள்ள திரு போம்பியோ நேற்று இவ்வாறு கூறினார். வடகொரியா அணுகுண்டு தயாரிப்பதற்கான எரிபொருளை யும் புதிய ஏவுகணைகளையும் தயாரித்துவருவதாக திரு போம்பியோ கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

அது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது "வடகொரியா அணுவாயுதங் களைக் கைவிடவேண்டும் என்று உலக நாடுகள், ஐநா பாதுகாப்பு மன்ற தீர்மானங்கள் வலியுறுத்து கின்றன. அதற்கு முரணாக வடகொரியா நடந்தாலும் நமக்கு வேண்டிய தீர்வை அடைய பல்வேறு வழிகள் இன்னும் உள்ளன," என திரு போம்பியோ செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.

வடகொரியாவுக்கு எதிரான வர்த்தகத் தடைகளைக் கெடு பிடியுடன் செயல்படுத்தியதற்காக ஆசியான் வெளியுறவு அமைச்சர் களுக்கு திரு போம்பியோ நன்றி தெரிவித்தார்.