பங்ளாதேஷில் ஒரு பேருந்து விபத்தில் இரு இளையர்கள் கொல்லப்பட்டதையடுத்து சாலை பாதுகாப்பு மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டாக்காவின் பல பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நேற்று 7வது நாளாக நீடித்த வேளையில் டாக்காவில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிச் சீருடையில் வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். படம்: ஏஎஃப்பி
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பங்ளாதேஷில் மாணவர்கள் 7வது நாளாக ஆர்ப்பாட்டம்
1 mins read
-

