கோலாலம்பூர்: இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலித் தீவில் பறிமுதல் செய்யப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டாலர் (1பில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான உல்லாசப் படகை மலேசியாவிடம் ஒப்படைக்க இந்தோனீசியா இணங்கியிருப்பதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இந்த உல்லாசப்படகு மலேசிய அரசாங்க நிதி சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. மலேசிய அரசாங்கம் தற்போது தேடி வரும் ஜோ லோ, 1எம்பிடி நிதியைப் பயன்படுத்தி வாங்கிய உல்லாசப் படகு இது என்று கூறப்படுகிறது. அமெரிக்க நீதித்துறை இலாகா செய்த விண்ணப்பத்தின் அடிப் படையில் இந்தோனீசியா இப் படகை பிடித்து வைத்திருந்தது. ஆனால் இந்தோனீசிய நீதிமன்றம் இப்படகு கைப்பற்றப் பட்டது தவறு என்றும் அதை மலேசியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.
1எம்பிடி: உல்லாசப் படகை மலேசியாவிடம் ஒப்படைக்க இந்தோனீசியா இணக்கம்
1 mins read

