மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர்ப்பின்போது மோசடி

மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர்ப்பின்போது மோசடி

1 mins read
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானில் தோக்கியோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் அதிகமான பெண்கள் சேர்வதைத் தடுக்கும் நோக்கத்தில், நுழைவுத் தேர்வு எழுதிய மாணவிகளின் தேர்வுத் தாள் மதிப்பெண்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேண்டுமென்றே குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் இத்தகைய போக்கு பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் வெளியானதும் ஜப்பானிய மக்கள் மட்டுமல்ல; பெண் மருத்துவர்கள் மற்றும் அந்த பல்கலைக்கழக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளனர். அத்துடன் பலர் தங்கள் அதிருப்தியையும் சினத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். திறமையுள்ள பெண்களுக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காமல் போனதற்கு இதுதான் காரணம் என்பதை அறியும்போது வருத்தமாக உள்ளது என்று பெண் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.