வெனிசுவேலாவில் 'வெடிகுண்டு டிரோன்' தாக்குதல்: தப்பினார் அதிபர்

வெனிசுவேலாவில் 'வெடிகுண்டு டிரோன்' தாக்குதல்: தப்பினார் அதிபர்

1 mins read
5caeb63d-a410-4cbc-b3ac-dd23c35c791f
-

கரகாஸ்: வெனிசுவேலாவில் நடத் தப்பட்ட 'வெடிகுண்டு டிரோன்' தாக்குதலில் அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மடுரோ காயமின்றி தப்பினார். ராணுவ விழா ஒன்றில் கலந்து கொண்டு அதிபர் மடுரோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பல டிரோன்கள் (ஆளில்லா வானூர்தி) அவர் இருந்த இடத்துக்கு அருகே வெடித்தன. இந்தத் தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். "இது அதிபர் மடுரோவுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்," என்று சம்பவத்துக்குப் பிறகு வெனிசுவேலாவின் தொடர்புத் துறை அமைச்சர் ஜார்ஜி ரோட்ரிகுவேஸ் தெரிவித்தார். ராணுவ விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது தாக்குதல் நிகழ்ந்ததால் அதைப் பலர் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்தனர்.

வெனிசுவேலா அரசாங்கத் துக்கு எதிராக மர்மக் கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. அதில் குடிமக்கள் சிலரும் ராணுவ வீரர்கள் சிலரும் இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலுக்கு இந்தக் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது.