கோலாலம்பூர்: மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் முகமது அஸ்மின் அலி சென்ற வார இறுதியில் சிங்கப்பூருக்கு வருகை அளித்தபோது சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதி வேக ரயில் சேவை குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு நடந்ததாக தெரிவித்தார். ரயில் சேவை பற்றிய அதிகாரபூர்வ சந்திப்பு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று அவர் சொன்னார். சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த மலேசிய உள்துறை அமைச்சர் முகைதீன் யாசினைப் பார்ப்பதற்காக திரு அஸ்மின் அலி சிங்கப்பூர் வந்திருந்தார்.
அதே சமயம் தன் வருகையை நல்ல வாய்ப்பாகப் பயன் படுத்திக்கொண்டு அதிவேக ரயில் சேவைத் திட்டம் பற்றி கலந்துபேச ஒரு சில மூத்த அதி காரிகளை சந்தித்ததாக அவர் கூறினார். அதிவேக ரயில் சேவைத் திட்டம் பற்றிய தகவல் களை மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் விரை வில் சிங்கப்பூருடன் சந்திப்பு நடைபெறும் என்றும் ஜூலை 23 என்று குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றின் வழி திரு அஸ்மின் அலி சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தார்.

