லொம்போக் நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் மரணம்

லொம்போக் நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் மரணம்

1 mins read
1be162b5-cd42-4b2f-bd26-f6b90280ef60
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லொம்போக் தீவை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக் கத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக் கானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். சென்ற வாரம் இதே லொம்போக் தீவுப் பகுதியை நிலநடுக்கம் உலுக்கியபோது குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை லொம்போக் தீவை உலுக்கிய 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் பல கட்டடங்களும் வீடுகளும் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின.

பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல் கள் உட்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சேதம் அடைந்ததாகக் கூறப்படு கிறது. இடிந்துவிழுந்த கட்டட இடி பாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழு வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள தாகவும் நிலநடுக்கம் உலுக்கிய பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் நிவாரண அமைப்பின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நக்ரோஹோ கூறினார். நிலநடுக்கத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப் படுவதாகவும் அப்பேச்சாளர் சொன்னார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக மக்கள் கூறினர்.

லொம்போக் தீவை நிலநடுக்கம் உலுக்கியபோது அருகில் உள்ள பாலித் தீவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. நில அதிர்வின்போது பாலித் தீவு டென்பசாரில் ஒரு பேரங்காடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ