இந்தோனீசியாவின் லொம்போக் தீவைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் ஏராளமானோர் மாண்டனர். நேற்றிரவு நிலவரப்படி மரண எண்ணிக்கை 105க்கு உயர்ந்துள்ளது. 236 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாகப் பல கிராமங்கள் இருந்த இடம் தெரிய வில்லை. ஆயிரக்கணக்கானோர் வசிப்பிடம் இல்லாமல் செய்வ தறியாது தவித்து வருகின்றனர். தங்கள் அன்பிற்குரியவர் களின் உயிரற்ற உடல்களைக் கண்டு பலர் கதறி அழுவது ஒரு புறமிருக்க, இடிபாடுகளுக்கு அடி யில் உயிரைப் பிடித்துக் கொண்டிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டு நாட்களாக இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவித்த பெண் ஒருவரை மீட்புப் பணியாளர்கள் நேற்று உயிருடன் மீட்டனர். 23 வயது குமாரி நாடியா ரெவனேலி மளிகைக் கடை ஒன்றில் பொருட்கள் வாங்கிகொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் சுற்றியுள்ள பல கட்டடங்களுடன் மளிகைக் கடையும் தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு அடியில் இருந்த குமாரி நாடியா உதவி கேட்டு அழும் சத்தம் அங்கிருந்த மீட்புப் பணியாளர்களின் செவிகளை எட்ட, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கினர். சிறு பிழை ஏற்பட்டாலும் குமாரி நாடியா உடல் நசுங்கி உயிரிழக்கும் ஆபத்து மீட்புப் பணியாளர்களுக்கு நெருக்குதலைத் தர, சிறிதளவும் கவனம் சிதறாமல் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியை அவர் கள் மேற்கொண்டனர்.
இடிபாடுகளிலிருந்து குமாரி நாடியாவை உயிருடன் மீட்டெடுக்கும் மீட்புப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

