ரியாத்: சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிடு வதாகக் கூறும் சவூதி அரேபியா, சில நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து அதன் தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது. அத்துடன் கனடாவுடனான அனைத்து வர்த்தகம் மற்றும் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாகவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காக பிரசாரம் செய்த ஒரு பெண் உட்பட பல தொண்டர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாக கனடா தெரிவித்ததைத் தொடர்ந்து சவூதி அரேபியா இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் கனடாவுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
கனடாவுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்த சவூதி நிறுவனம்
1 mins read

