எம்.பி.களின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும்

எம்.பி.களின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும்

1 mins read

ஈப்போ: அமைச்சரவை உறுப்பினர்கள், அரசாங்க நிர்வாக அலுவலர்கள் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நாளிலிருந்து 30 நாட் களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். இதுபற்றி சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதாகவும் அப்போது அவர்கள் அனைவரும் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையாளர் ஷம்சூம் பஹரின் முகமட் ஜமீல் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு படிவங்கள் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்படும் என்று ஷம்சூம் சொன்னார்.